2/25/2010

Dinamalar News


அவள் பெயர் தமிழரசி படம் 8 வயது முதல் 30 வயது வரையிலான வாழ்க்கை பதிவை சொல்லியிருக்கும் படம் என்று அதன் இயக்குனர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார். படத்தின் நாயகன் ஜெய் 2 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். 8 வயதில் ஏற்படும் நட்பு, 30 வயது வரை எப்படி நீடிக்கிறது என்பதை தத்ருபமான பதிவாக படமாக்கியிருப்பதாக கூறும் டைரக்டர் மீராகதிரவன், இப்படத்தின் சூட்டிங்கை 2007ம் ஆண்டே தொடங்கி விட்டார். முதலில் டிரைலரை மட்டும் படமாக்கியிருக்கிறார். அதன்பிறகே மோசர்பியர் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறது. முழுக்க முழுக்க வித்தியாசமான காட்சியமைப்புகளுடன் படமாகியிருக்கும் அவள் பெயர் தமிழரசி காதல், துரோகம், தண்டனை, வெற்றி, விடுதலை போன்ற பல்வேறு உணர்ச்சிகளை மையமாக கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் இந்தியாவின் முக்கிய திரைப்பட விமர்சகர் தியோடர் பாஸ்கரன், பிரபல ஓவியர் வீர சந்தானம், என் உயிர்தோழன் ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment

This is the comment Form

Your Ad Here
Your Ad Here
Your Ad Here
Your Ad Here
Your Ad Here