
வாஷிங்டன்: டொயாட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம், தங்கள் நிறுவன கார்களில்'ஆக்சிலரேஷன் கருவியில்' ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏராளமான கார்கள் திரும்ப பெறப்பட்டதற்கு, அந்நிறுவனம் நேற்று அமெரிக்க பார்லிமென்ட் குழு முன் மன்னிப்பு கோரியது. டொயாட்டோ நிறுவனம் விற்பனை செய்த கார்களில்,'ஆக்சிலரேஷன் கருவி' செயல்பாடு சரியில்லாததால் ஏற்பட்ட விபத்துக்களில், அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமான விபத்துக்கள் குறித்தும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. எனவே, டொயாட்டோ நிறுவனம், உலகளவில் விற்பனை செய்த 85 லட்சம் கார்களை திரும்பப் பெற்றது. இதை தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பும் குறைந்தது. இதையடுத்து, டொயாட்டோ நிறுவன கார்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த டொயாட்டோ நிறுவனத் தலைவர் ஆகியோ டொயாட்டோ கூறியதாவது: டொயாட்டோ நிறுவன கார்கள் மூலம் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். டொயாட் டோ நிறுவனம், எப்போதும், அமெரிக்க மக்களின் நலனுக்காக பணியாற்றும். நான் மனப்பூர்வமாக இதை தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், இதை மக்கள் புரிந்து கொள்வார்களா என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு ஆகியோ டொயாட்டோ கூறினார்.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் யூகியோ ஹட்டோயாமா கூறுகையில்,'டொயாட்டோ நிறுவன தலைவர், அமெரிக்க பார்லிமென்ட் குழு முன் ஆஜராகி, அவர்கள் நிறுவன வாகனங்களின் பாதுகாப்பிற்கு உறுதியளித்திருப்பது, நல்ல விஷயம். அவர், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து பேசி உள்ளார். இது கார்கள் மற்றும் மக்களின் வாழ்வை பாதிக்கும் விவகாரம், என்பதால் தேவைப்படும் இடங்களில், பாதுகாப்பை அதிகரிக்க தீவிர கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்வர் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.
No comments:
Post a Comment
This is the comment Form