2/13/2010

தற்போதைய செய்தி

புனேயில் குண்டுவெடிப்பு : 9 பேர் பலி : 50க்கும் மேற்பட்டோர் காயம்

பிப்ரவரி 13,2010,21:24 IST Source : dinamalar








புனே : புனேயின் கோரேகான் பூங்கா பகுதியில் உள்ள பிரபல ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் பலியாயினர்; 53 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டவர் என்று தெரிய வந்துள்ளது. பேக்கரியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை பேக்கரி ஊழியர் ஒருவர் திறநது பார்க்க முயன்றபோது அதில் இருந்த குண்டு வெடித்தது. இது பயங்கரவாத தாக்குதல் என மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் புனேயின் கோரேகான் பகுதியில் உள்ள பிரபல ஜெர்மன் பேக்கரியில், நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். வெளிநாட்டினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சசூன், ஜஹாங்கிர் மற்றும் உத்ராணி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் வெளிநாட்டவர்களும் இருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் உடல்கள் அடையாளம் காணப்பட்ட பின்னே, இதுகுறித்த உறுதியான தகவல் தெரியும்.

புனேயின் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஓஷோ ஆசிரமம் அருகில் ஜெர்மன் பேக்கரி உள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அமெரிக்கரான டேவிட் ஹெட்லி, இந்தியா வந்திருந்த போது இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்ததாக போலீசார் கூறினர். இந்நிலையில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் நேரில் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், இது சிலிண்டர் வெடிவிபத்து அல்ல என்றும், பயங்கரவாத தாக்குதல் தான் என்றும் தெரிவித்தார். புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி, வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால், தாக்குதலுக்கு இந்த இடத்தை பயங்கரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என கூறினார். இதே கருத்தை மத்திய பாதுகாப்புத்துறை செயலர் ஜி.கே. பிள்ளையும் கூறியுள்ளார். மிகவும் கவனமாக இருக்கும் படி மக்களை மகாராஷ்டிர அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சி.பி.ஐ., பாரன்சிக் அமைப்பு, மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் புனே விரைந்துள்ளனர்.


கவலைப்பட தேவையில்லை: வெடிவிபத்து குறித்து மகா., முதல்வர் அசோக் சவான் கூறுகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளோம். எனவே இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை என தெரிவித்தார். முதற்கட்ட சோதனைகள் நடந்து வருவதாகவும், ஆய்விற்குப்பின்னே இது எவ்வகையான வெடிவிபத்து என்பது குறித்து தெரியவரும் என்றும் தெரிவித்தார்.


லக்ஷர்-இ-தொய்பாவால் நோட்டமிடப்பட்ட பேக்கரி : புனே: புனேயில் ஒஷோ ஆஸ்ரமம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த பேக்கரி லக்ஷர் இ தொய்பாவால் நோட்டமிடப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒஷோ ஆஸ்ரமம் அருகேயுள்ள ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பில் பலியான 12 பேரில் ஐந்து பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. இதில் ஒருவர் வெளிநாட்டவர். ஆஸ்ரமத் திற்கு வரும் வெளிநாட்டவர்கள் விரும்பி இந்த பேக்கரிக்கு வருவது வழக்கம். இதனால் இந்த பேக்கரியை லக்ஷர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவரும், பாகிஸ் தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல் மென் ஹெட்லி என்பவர் நோட்டமிட்ட விபரம் தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். விரைவில் இந்தியா, பாக்., இடையே பேச்சுவார்த்தை நடப்பதை கெடுக்கும் வகையிலும், வெளிநாட்டவர்கள் இந்தியா வருவதற்கு பயம் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.பேக்கரியில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த பார்சலை, வெயிட்டர் ஒருவர் திறந்துபார்த்த போது குண்டுவெடித்ததாக பேக்கரி ஊழியர்கள் தெரிவித்தனர்.


சிதம்பரம், சோனியா கண்டனம் : மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் பலியாயினர். 50க்கும் மேற்ப்டடோர் பலியாயினர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து விளக்க வருமாறு முதல்வர் அசோக் சவானுக்கு சோனியா அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: இந்த சம்பவம் கண்டனத்திற்குரியது என்றும், இதுகுறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இறுதியில் தான் இது பயங்கரவாதிகளின் செயலா, இல்லையா என்று கூற முடியும் என்றும், இந்தியாவில் வாழும் வெளிநாட்டுப் பயணிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியா மீது அயல்நாடுகள் வைத்திருக்கும் மதிப்பை சீர்குலைக்கப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், சம்பவ இடத்தில் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், போர்ஸ் ஒன் உள்ளிட்ட படையினர் முகாமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா எந்தவகை தாக்குதல்களையும் திறமை பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஜெர்மன் பேக்கரியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இஸ்ரேல் மையம். இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது : இந்த குண்டுவெடிப்பில் இஸ்ரேல் நாட்டவர்கள் பாதிக்கப்படவில்லை என்றும், யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

This is the comment Form

Your Ad Here
Your Ad Here
Your Ad Here
Your Ad Here
Your Ad Here